Sunday 21 August 2016

கலாம் சிறகுகள் இயக்கம் : தெற்கு விருதாங்கன்

எல்லாருக்கும் வணக்கம்,
        எழுத்தில் குழந்தை நான் இது தான் என் முதல் கொட்டங்குச்சி சோறு தவறு இருந்தால் மன்னியுங்கள் திருத்துங்கள் .

ஊரின் வாசம்:
        எங்க  ஊர  பத்தி சொல்லணும் னா "பாரதி ராஜா  படத்துல சொல்லுவரே அது மாதிரி அழகிய பூஞ்சோலை t.viruthangan its a beautiful village" கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில்  அழகிய பறவைகளின்  இல்லம் வீராணம் ஏரியின் கரையில் பார்ப்போர் கண் கவரும் விதத்தில் அமைந்துள்ளது தான் எங்கள் ஊர்
veeranam lake
natarajar temple chidamabram
இருபுறம் வயல்வெளிகள் நடுவே சாலை ஊருக்குள் இறங்கியதும் அடிக்கும் எங்கள் ஊர் வாசமும் விடுமுறைக்கு வந்தாலும் திரும்ப விடாது உங்களை.  கூப்பிடும் தூரத்தில் நடராஜரும் சென்று வரும் தூரத்தில் பாபாஜி அவர்களின் பிரப்பிடமுமான பரங்கிபேட்டையும் ,கடற்கரைகளும்,கல்விக்கு  அண்ணாமலை பல்கலைகழகமும் சுற்றுலாவிற்கு பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளும் என சொல்லிகொண்டே போகலாம் அவ்வளவு வனப்பு மிக்க பகுதி. எங்கள் ஊர் தெற்கு விருதாங்கநல்லூர் பெயரே எவ்ளோ அழகா இருக்குள்ள! ஊரும் அப்படித்தான்.

கனவுகளின் துவக்கம் :
         இவன் என்ன கலாமின் சிறகுகள் இயக்கம் னு தலைப்பு  வச்சிக்கிட்டு ஊற பத்தி பேசிட்டு இருக்கான் னு  தோணுதா எதையும் செயல் படுத்த ஒரு தளம் வேண்டும் அது சிறப்பாக இருந்தால்  மட்டுமே மாற்றம் நம்மோடு நில்லாமல் பிறர்க்கும் சென்று சேரும் அவ்வாறு எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட இறைவன் அமைத்து கொடுத்த தளமாகவே இதை எண்ணுகிறேன்.
   
       எங்கள் கிராமம் படிப்பறிவில்லாமல் இருந்த காலம் மாறி இப்போ பட்டதாரிகள் நிறைந்த கிராமமாக இருக்கிறது இருப்பினும் வழிகாட்டல் என்பது எங்களுக்கு நிறைய கிடைத்தது இல்லை.

     " ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல்" இன்னும் பழமை பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் ஊர்களில் எங்கள் ஊரும் ஒன்று, பழமை என்று  நமது பண்பாடுகளை கூறவில்லை பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞர்களிடமும் உண்டு என்பதில் அலாதியான நம்பிக்கையும் செயல்பாடும்  உள்ளவன் நான் இன்னும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும் பாகுபாடுகளையும்  பிரிவுகளையும் மட்டுமே பழைமையாய் பார்கிறேன்.
முதலில் இதை களையவே உருவானது கலாம் சிறகுகள் இயக்கம். ஒன்று சேர்ந்து நன்மை செய்யவேண்டும் என்பது எங்களது நோக்கம் ..

ஏன் இந்த பேரு வச்சானுங்க:


ஏன் இதற்க்கு அமரர் திரு அய்யா அப்துல் கலாம் பெயரை வைத்தோம் என கேட்போருக்கு எனது பதில் நமது தாத்தா, அப்பா  கூறிய நான் பள்ளியில் படித்த கேட்ட இந்த சமூக மாற்றத்திற்காக போராடிய விடுதலைக்க்காக தன்னுயிர் ஈன்ற தலைவர்கள்  வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ,பாரதி , வேலு நாச்சியார் ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,கொடிகாத்த  குமரன் ,அம்பேத்கர்  போன்றவர்களை படித்தும் கேட்டும் வளர்ந்தோம் எஞ்சி இருக்கும் வீரத்திற்கும் அவர்களே விதைகள்.

       ஆனால் அவர்களை பார்த்தது இல்லை அப்போது நல்லவர்கள் வாழ சூழ்நிலை இருந்தது அனால் இக்காலம் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்த போருலகில் ஒரு பூவாய்
என் சமகால தலைவன் தன்னை முன்னிறுத்தி கொண்டவன் இல்லை தன் அறிவியலால் முன்னிறுத்த பட்டவன் தான்  எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதை தன் பெயரை தவிர வேறதிலும் நாங்கள் கண்டதில்லை மதச்சார்பின்மையின் சின்னமாக அறிவின் ஊற்றாக ஒரு வளர்ந்து விட்ட குழந்தையாய்  கடைசி வரை எங்களை (இளைஞர்களை )நம்பிய தலைவன் எங்கள் கையில் இந்த இந்தியாவை ஒப்படைத்துவிட்டு தான் நிம்மதியாய் உறங்க சென்றுவிட்டார். ஆனால் கனவுகளை எங்களை சுமக்க வைத்தார்
இறக்கும் தருவாயிலும் இந்தியாவுக்காக இளைஞர்களுக்காக உழைத்தவர் என் தலைவன் அவரை தவிர வேறு பெயர் தோன்றவில்லை இந்த சமூகத்திற்கு நல்லது  செய்ய.

அப்படி என்ன தான் பெருசா செஞ்சீங்க :
இவ்ளோ பேசுறிங்களே அப்படி என்ன செஞ்சிங்க என்போர்க்கு  எந்த மாற்றமும் நடக்க சிறு தூண்டல் தேவை படுகிறது அவ்வாறு தூண்டலாக இருந்தது எங்கள் ஊரின் உறவுகள்.
ஆம் அதிகம் படித்தவன் செய்வேண்டிய நன்மைகளை அதிகம் படிக்காதவர்களை முதற்படி எடுத்து வைக்க வைத்தவர் எங்கள் கலாம் அய்யா இளைஞர்கள் சேர்ந்தால் குட்டிசுவர் பேச்சுதான் என்று கூறும் ஊரின் நடுவே கிராமத்தில் நன்மைகளை செய்ய உருவானது இந்த இயக்கம் அப்படி என்ன கிழிச்சிட போறானுங்க என்று பார்த்த கிராம மக்களிடம் முதல் விதையை விதைத்தது எங்கள் உறவுகள் அரசினர் துவக்க பள்ளியின் கழிவறை சுத்தம் செய்து  அடுத்த படியாக பள்ளி மாணவர்களுக்கு பேனா பென்சில் வங்கி கொடுத்து அவர்களை ஊக்குவித்தல் பள்ளியில் மரக்கன்று நட்டு, ஊரை சுத்தம் செய்து  எடுத்துகாட்டாக மாறியது எங்கள் ஊர் உறவுகள்.

      இவ்வாறு எங்கள்  ஊரை திரும்பி பார்க்க வைத்துள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் இவ்வாறு எங்கள் நோக்கம் என்னவென்று செயல் மூலம் காட்டிவிட்டு  ஆகஸ்ட் -15-2016 அன்று இனிதே துவங்க பட்டது எங்கள் இயக்கம்  இது என்ன பெரிய செயல் என்று தோன்றலாம்  ஆம் சுயநலம் மிகுந்த இந்த காலகட்டதில் எந்த ஒரு பெரிய சம்பளமும் வாங்காத கிராமத்து இளைஞர்கள் களுக்கு இது என் பார்வையில் மிகபெரிய செயல் அது மட்டும் இல்லாமல்


இது கட்சி கூடத்திற்காக சேர்ந்தது இல்லை சண்டைகளுகாகவும், சுயநலதிர்க்காகவும் சேரவில்லை வாழ்ந்த வளர்ந்த எங்கள் கிராமத்தில் நன்மை செய்யவேண்டும் என்று கூடிய கூட்டம் இது "கூட்டியது இல்லை கூடியது" இதுவே எங்கள் வெற்றி   தன்னார்வம் கொண்டு செயல்படும் அணி மரம் நடுதல்
சுத்தமான சுற்றுசூழல் மேலும் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை ,இயற்கை விவசாயம் , என எங்கள் கனவுகள் மிக பெரியது அதற்கான வழியில் செல்ல முனைகிறோம் இது இதோடு நின்று விட போவதில்லை
உங்களின் ஊக்கம் எங்களை உற்சாகபடுத்தும் நன்மைகளை செய்ய வழிவகுக்கும் விரைவில் மேலும் விவரங்களோடு  (தொடரும்...)

கருத்துகள் வரவேற்க படுகிறது.....